செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 23 நவம்பர் 2018 (12:28 IST)

எனக்கா ரெட் கார்டு, எடுத்து பாரு என் ரெக்கார்டு? விஷாலை வம்புக்கு இழுக்கும் சிம்பு

சிம்பு நடித்து வரும் வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையவுள்ள நிலையில் இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த படத்திற்கு ரெட் கார்ட் போட வேண்டும் என்று விஷால் முயற்சிப்பதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்தது. இதனால் சிம்பு ரசிகர்கள் விஷாலை கடுமையாக விமர்சனம் செய்ய, சிம்பு தனது ரசிகர்களை அமைதிப்படுத்தினார்

இந்த நிலையில் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளிவரவுள்ளது. இந்த பாடலின் தொடக்கமே, ''எனக்கா ரெட் கார்டு எடுத்து பாரு என் ரெக்கார்டு'  என்று தொடங்குகிறதாம். இந்த வரிகள் விஷாலை வம்புக்கு இழுப்பது போல் உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.