செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (16:48 IST)

25 ஆண்டுகளை நிறைவு செய்த காதல் கோட்டை… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

நடிகர் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்த காதல் கோட்டை திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு இயக்குனர் தேசிய விருது பெறுகிறார் என்றால் அது காதல் கோட்டை படத்துக்காக இயக்குனர் அகத்தியன் காதல் கோட்டை திரைக்கதைக்காக பெற்றதுதான். வழக்கமாக தேசிய விருது பெற்ற படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடாது என்ற எண்ணத்தை விரட்டி அடித்து 250 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படம் காதல் கோட்டை.

இந்த படத்தின் மூலம் அஜித் மற்றும் தேவயாணி ஆகியோர் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தனர். இப்போது அஜித் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் காதல் கோட்டை படம் 25 ஆம் ஆண்டு நிறைவு செய்துள்ளதை அடுத்து அஜித்தைத் தவிர மற்ற கலைஞர்கள் எல்லோரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.