வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 12 ஜூலை 2021 (21:32 IST)

விஜய் மக்கள் இயக்கத்தினர் மாணவர்களுக்கு உதவி !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது விஜய்யின் பீஸ்ட் பட முதல் மற்றூம் இரண்டாம் லுக் போஸ்டர்களை படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது..

இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது வரை விதவிதனாம  பீஸ்ட் படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களுன் பதிவிட்டு இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தனியார் பள்ளியில் படிக்கும் சுமார் 47 ஏழை மாணவர்களுக்கு ஓராண்டிற்குத் தேவையான கல்விச் செலவுக்கான நிதியுதவி வழங்கி மதுரை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவினர்.அதேபோல் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள வாசு திரையரங்கின் முன் விஜய் பிறந்தநாளை தூய்மைப் பணியாளர்களுடன் கேக் வெட்டி எளியாகக் கொண்டாடினர்.

இந்நிலையில் இன்று கடலூர் மேர்கு மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், 12, மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்துள்ள பள்ளி மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் ஆன்லைன் மூலம் தளபதி மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சியை  ஒருங்கிணைத்தனர். இதில் மாணவர்கள் பலர் கலந்துகொண்டு அவர்களின் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

விஜய் மக்கள் இயக்கத்தினரின் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.