புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (23:49 IST)

நடிகர் விஜய்க்கு பிடித்த உணவு இதுதான்....

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும்   ’பீஸ்ட் ’பட முதல் மற்றூம் இரண்டாம் லுக் போஸ்டர்களை படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.

இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது வரை விதவிதனாம  பீஸ்ட் படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களுன் பதிவிட்டு இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  நடிகர் விஜய் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பழைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், தனக்கு அசைவ உணவுகள் தான் அதிகம் பிடிக்கும் என்பதால் வீட்டில்  செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் கட்டாயம் சைவ உணவுகள்தான் சாப்பிட வேண்டுமென கூறிவிட்டதால், அந்த இரண்டு தினங்கள் மட்டும் படப்பிடிப்புத் தளத்திலேயே அசைவ உணவு சாப்பிட்டு விடுவதாகவும் அவர் கூறும் வீடியோவை ரசிகர்கள் பரவலாக்கி வருகின்றனர்.