ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (09:25 IST)

நெஞ்சுக்கு நீதி படத்தைப் பாராட்டிய கமல்… பெரியார், அம்பேத்கர் சிலைகளை வழங்கிய உதயநிதி!’

சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தன் நிறுவனம் மூலம் வெளியிட்டார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதுவரை தமிழ் படங்கள் படைத்த பல வசூல் சாதனைகளை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட திரையரங்குகள் மூலமாக 450 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகின்றன.

விக்ரம் படத்தின் தமிழக வெற்றிக்கு படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. படத்துக்கு முக்கியமான திரைகளை ஒதுக்கி ஏற்பாடு செய்து நல்ல விளம்பரமும் செய்தனர். இதையடுத்து கமல் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் அடிக்கடி சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் வெளியான உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தைப் பார்த்த கமல்ஹாசன் படக்குழுவை அழைத்துப் பாராட்டியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்களை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் “'#NenjukuNeedhi' படத்தை பார்த்து குழுவினரை இன்று அழைத்து பாராட்டிய Kamal Haasan  சாருக்கு நன்றி. '#Vikram'-ல் உடன் பங்கேற்றதற்காக நினைவுப் பரிசு வழங்கினார். நாங்கள் பெரியார்-அம்பேத்கர் சிலைகளை பரிசளித்து மகிழ்ந்தோம். ” எனக் கூறியுள்ளார்.