1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (09:35 IST)

“என் மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள்…” இளையராஜாவின் நன்றி ட்வீட்

இசைஞானி இளையராஜாவுக்கு ராஜ்யசபா நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது.

இசைஞானி இளையராஜாவின் சாதனைகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. கிட்டத்தட்ட 1400 படங்களுக்கு மேல் 6000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா இப்போதும் விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று மத்திய அரசு இளையராஜா, பிடி உஷா உள்பட 4 பேருக்கு நியமன ராஜ்யசபா எம்பி பதவி வழங்குவதாக அறிவித்தது. இதனை அடுத்து இளையராஜாவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இளையராஜா அமெரிக்காவில் இருந்து ட்வீட் செய்துள்ளார்.

அவரது ட்வீட்டில் “என்மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கௌரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர் .  உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும்  என் உளங்கனிந்த நன்றி... from Seattle, USA” என நன்றி தெரிவித்துள்ளார்.