1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2022 (19:55 IST)

தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டேன்: கமல்ஹாசன் டுவிட்

kamal
பிரபல மலையாள எழுத்தாளர் முகம்மது பஷீர் நினைவு தினத்தை பிறந்த தினம் என தவறாக குறிப்பிட்டு இருந்ததாக கமல்ஹாசன் அடுத்தடுத்து இரண்டு டுவிட்களை பதிவு செய்துள்ளார். இந்த பதிவுகள் பின்வருமாறு:
 
மலையாள எழுத்தாளுமையில் கோலோச்சியவர் வைக்கம் முகம்மது பஷீர். அதற்கேற்ப பேப்பூர் சுல்தான் என்றே பெயரும் சூட்டப்பட்டுக் கொண்டாடப்பட்டவர். என் பால்யத்தில் மலையாளக் குளிர்ச்சியைப் பரிச்சயப்படுத்திய எழுத்தாளருக்கு ஜென்மதின ஆசம்ஷகள்
 
இன்று பஷீரின் நினைவு தினம். ஜென்ம தினம் என தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டேன். அவர் வெவ்வேறு எழுத்தாளர்களில் மீண்டும் மீண்டும் வெளிப்பட வேண்டும் எனும் என் தணியாத ஆவல்தான் இப்படி வெளிப்பட்டுவிட்டதோ என எண்ணுகிறேன்