1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (07:25 IST)

இளையராஜாவுக்கு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம்: கமல்ஹாசன் ட்வீட்

ilaiyaraja
இளையராஜாவுக்கு ஜனாதிபதி பதவியை கொடுக்கலாம் என உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
நேற்று மத்திய அரசு இளையராஜா, பிடி உஷா உள்பட 4 பேருக்கு நியமன ராஜ்யசபா எம்பி பதவி வழங்குவதாக அறிவித்தது. இதனை அடுத்து இளையராஜாவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் 
இந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் இசைஞானி இளையராஜாவுக்கு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம் என தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார், அவர் இது பற்றி மேலும் கூறியதாவது:
 
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத  இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்.