வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (09:12 IST)

தமிழ் சினிமாவின் மைல்கல் ஹிட் ‘விக்ரம்’…. வெளியானது ஓடிடியில்!

கடந்த மாதம் 3 ஆம் தேதி வெளியான கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் தமிழ் திரைத்துறையின் பென்ச் மார்க் ஹிட்டாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை தமிழ் படங்கள் படைத்த பல வசூல் சாதனைகளை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட திரையரங்குகள் மூலமாக 450 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகின்றன.

ரிலீஸூக்கு முன்பே விக்ரம் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக கமல்ஹாசனுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்துள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் ரிலீஸூக்குப் பிந்தைய பிளாக்பஸ்டர் ஹிட்டால் அந்த லாபம் 127 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர படத்துக்காக அவரின் சம்பளத்தையும் சேர்த்தால் 170 கோடிக்கும் மேல் அவருக்கு லாபம் கிடைத்திருக்கும் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐந்து மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் விக்ரம் திரைப்படம் நள்ளிரவு 12 மணி முதல் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. ஓடிடியில் வெளியானாலும் இன்னமும் சில திரையரங்குகளில் விக்ரம் திரைப்படம் கணிசமான ரசிகர்கள் வருகையோடு ஓடி வருவது குறிப்பிடத்தகக்து.