திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (22:18 IST)

''இந்தப் படம் பிளாக் பஸ்டர் ஹிட் '' கமலின் டீமை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படத்தில், பஹத்பாசில், விஜய்சேதுபதில்,  நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இப்படம் ரிலீஸுக்கு முன்பு பல கோடி வியாபாரமாகியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதய நிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ள்து. இப்படத்தின் படத்தின் டிரைலர், மற்றும் பெரும்  வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,இன்று விக்ரம் படத்தை பார்த்த உதய நிதி ஸ்டாலின் இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என்று தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார்.