வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 19 மே 2022 (17:15 IST)

உதயநிதி ஸ்டாலின் 50 அடியில் கட் அவுட்...வைரலாகும் புகைப்படம்

Nenjjukku needhi
நெஞ்சுக்கு நீதி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ஹீரோ உதய நிதிக்கு சுமார்  50  அடி  உயரத்தில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில்  அஜித்தின் ‘வலிமை’ படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிப்பில் உருவாகிய படம்  நெஞ்சுக்கு நீதி. இப்படத்தில், உதயநிதி, ஆரி, தன்யா ரவிச்சந்திரன். சிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர்.

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் 139 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி நேரம் 19 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்பது குறிப்பிடத்தக்கது

இந் நிலையில், உதய நிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு  50 அடி கட் அவுட், மதுரை கோபுரம் சினிமாஸில்  வைக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.