1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 16 மே 2022 (18:43 IST)

ஆர்யாவின் அடுத்த படத்தையும் வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!

arya captain
ஆர்யாவின் அடுத்த படத்தையும் வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
ஆர்யா நடித்துள்ள அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது
 
ஆர்யா நடித்து வரும் அடுத்த படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் வந்தார் என்பதும் கேப்டன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படம் செப்டம்பர் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலின் பெற்றுள்ளார். இதுகுறித்து புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன
 
ஆர்யாவுடன், சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி,  , காவ்யா ஷெட்டி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களில், யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.