வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 ஜனவரி 2018 (17:08 IST)

யு சான்றிதழ் பெற்று ரிலீஸ் தேதி உறுதியான டிக் டிக் டிக்

‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘டிக் டிக் டிக்’. இந்தியாவின் முதல் விண்வெளிப் படம்  என்ற பெருமையுடன் தயாராகி வரும் இந்தப் படத்தில், ஹீரோயினாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இந்தப் படத்தில், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் முக்கிய  வேடத்தில் நடித்துள்ளார். 
டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் நேமிசந்த் ஜபக் தயாரித்துள்ளார். 'டிக் டிக் டிக்' படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்துக்கு எந்த  கத்திரியும் இல்லாமல் யு சான்றிதழ் வழங்கியுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு 'டிக் டிக் டிக்' படம் வருகிற 26-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. 
 
கடந்த சில வாரங்களாக உடல் நலக் குறைவினால் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார் 'ஜெயம்' ரவி. அதனால் 'டிக் டிக் டிக்' படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் கூட  அவரால் முழுமையாக ஈடுபட முடியவில்லை. இருந்தாலும் இன்று அவர் பத்திரிகையாளர்களைச் சந்திக்க உள்ளார்.