வாரிசு நடிகருக்கு பாட்டியாக நடிக்க ஆசைப்படும் நடிகை யார் தெரியுமா?
சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரவ் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் டிக் டிக் டிக். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் பேசிய நிவேதா, சக்தி சார் என்னை ஒருயோரு முறை பார்த்த உடனேயே ஓகே சொல்லிவிட்டார். அவர் என் மீது வைத்த நம்பிக்கையால் ஸ்டண்ட் உள்ளிட்ட காட்சிகளில் முழுமையாக என்னை ஈடுபடுத்தி நடித்துள்ளேன். மைக்கேல் மாஸ்டரை நான் பலமுறை மனசுக்குள் திட்டியிருக்கிறேன். டிக் டிக் டிக் படப்பிடிப்பு துவங்கும் முன்பு இதில் எப்படி நடிக்கப் போகிறோம் என்று பயந்தேன். வித்யாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் ஜெயம் ரவியை போன்று வேறு எந்த ஹீரோவையும் பார்த்தது இல்லை. ஜெயம் ரவியின் மகன் ஆரவ் குட்டி காட்சி முடிந்ததும் கேரவனுக்கு போக மாட்டாங்க. ஸ்பாட்டிலேயே இருப்பாங்க. இது ஆரவின் முதல் படம். அவரின் 100வது படத்திலும் நடிக்க விரும்புகிறேன். அதில் அவரின் பாட்டியாக நடிப்பேன். இவ்வாறு நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.