செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2018 (12:59 IST)

இரவில் படமாகும் ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’

ஜெயம் ரவி நடித்துவரும் ‘அடங்க மறு’ படத்தின் காட்சிகள் இரவு நேரங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன.
சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘டிக் டிக் டிக்’. நிவேதா பெத்துராஜ் ஜெயம் ரவி ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தியாவின் முதல் விண்வெளிப்  படமான இது, வருகிற 26ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
 
இந்தப் படத்துக்குப் பிறகு அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இந்தப் படத்துக்கு  ‘அடங்க மறு’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஹோம் மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ராஷி கண்ணா, ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறார்.
 
‘விக்ரம் வேதா’ படத்துக்கு இசையமைத்த சாம் சி.எஸ்., இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஆண்டனி ரூபன் எடிட் செய்கிறார். இது, ஜெயம் ரவியின் 24வது படம். இந்தப் படத்தின் ஷூட்டிங், தற்போது அண்ணா நகரில் நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் மற்றும் சேஸிங் காட்சிகளை எடுத்து வருகின்றனர். இந்தக் காட்சிகள், இரவில் மட்டுமே படமாக்கப்பட்டு வருகின்றன.