வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2019 (09:33 IST)

மீரா தோளில் கைபோட்ட சரவணன்! பிக்பாஸ் வீட்டில் நடக்கும் கூத்து!

பிக்பாஸ் வீட்டில் மீராமிதுன் இதுவரை பிரச்சனை செய்யாதவர் அனேகமாக சரவணன் ஒருவராகத்தான் இருக்கும். ஆனால் இன்று அவருடன் மீரா பிரச்சனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 
இன்றைய கிராமத்து டாஸ்க்கில் மீராமிதுன் தோளில் சரவணன் கைபோடுகிறார். இதனை மீராமிதுன் சிரித்து கொண்டே ஏற்று கொண்டாலும், பின்னர் அவர் பிரச்சனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.;
 
இன்றைய டாஸ்க்கில் பாம்புப்பட்டி, கீரிப்பட்டி என பிரியும் பிக்பாஸ் வீடு, கீரிப்பட்டியினர் கொடுக்கும் டாஸ்க்கை பாம்புப்பட்டியினர் செய்தால்தான் சாப்பாடு சாப்பிட முடியும். இதனை வைத்து கீரிப்பட்டியில் இருக்கும் போட்டியாளர்கள் தங்கள் பகையை தீர்த்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் வழக்கம்போல் இந்த டாஸ்க்கிலும் பிரச்சனை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த டாஸ்க்கில் ரேஷ்மா, அபிராமி தோப்புக்கரணம் போடுவது, சாக்சிக்கு தர்ஷன் சாப்பாடு ஊட்டுவது போன்ற காட்சிகளும் இருக்கின்றது. மொத்தத்தில் இந்த டாஸ்க்கினால் ஏற்படும் ஒரே திருப்தி பெண் போட்டியாளர்கள் அனைவரும் கண்ணை உறுத்தாத வகையில் கிராமத்து உடை அணிந்திருப்பது ஒன்றுதான் என கருதப்படுகிறது