செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 22 ஜூலை 2019 (13:49 IST)

லொஸ்லியாவை வெளியே துரத்துங்கள் - கொந்தளிக்கும் ஆர்மிஸ்!

சமீப நாட்களான லொஸ்லியாவின் செயலை கண்டு ரசிகர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். மேலும் அவரது ரசிகர்களே அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்புங்கள் என்று கோரிக்கை வைக்குமளவிற்கு தனக்கு கிடைத்த பெயரை தானே கெடுத்துக்கொண்டார் லொஸ்லியா. 


 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் லொஸ்லியா மீண்டும் கவினுடன் சென்று மொக்கை போடுகிறார். அதாவது, "சாரி, நீ நடிக்கிறாய் என்று சொன்னதற்கு என கவினிடம் கூறி மீண்டும் அவருடன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். 
 
பிக்பாஸில் லொஸ்லியாவுக்கு கிடைத்த வரவேற்பு கொஞ்சம் நாட்கள் கூட நீடித்திருக்கவில்லை. காரணம் அவர் கவினுடன் சேர்ந்த அந்த நட்பு தான். பின்னர் சாக்ஷி கவினுக்கும் இடையே காதல் ஆரம்பித்த நாளிலிருந்தே லொஸ்லியா தேவையில்லாமல் மூக்கை நுழைத்து தனது பெயரை கெடுத்துக்கொண்டார்.  இதனால் லொஸ்லியா ஆர்மிஸ் அவரை வெறுத்து விட்டனர்.
 
இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த ப்ரோமோ வீடியோவில் கவினுடனான அந்த நட்பை ஆரம்பிக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் "அவன் சும்மா இருந்தாலும் இவங்க விடமாட்டாங்க போல" என கூறி செம்ம கடுப்பில் கிண்டடித்து வருவதோடு "லொஸ்லியவை வெளியே துரத்திவிடுங்கள்" என அவரது ரசிகர்களே புலம்ப ஆதரம்பித்துவிட்டனர்.