திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 22 மே 2018 (20:41 IST)

தளபதி 62 திரைப்படம் அதிமுக கதையா? அதிர வைக்கும் புகைப்படங்கள்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62 திரைப்படம் ஒரு அரசியல் படம் என்று இணையத்தில் கசிந்து வந்த செய்திகள் கூறி வரும் நிலையில் தற்போது இந்த படம் அதிமுகவில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள் குறித்த காட்சிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்த படத்திற்காக சமீபத்தில் சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் செட் ஒன்று போடப்பட்டது. அரசியல் மீட்டிங் நடப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்படவுள்ள நிலையில் இந்த செட்டில் ஒருசில பிரமாண்டமான கட்-அவுட்டுக்களும் இடம்பெற்றுள்ளது. அந்த கட் அவுட்டுக்களில் அ.இ.ம.மு.க இணைப்பு விழாவுக்கு வருகை தரும் எங்களின் பண்பாளரே வருக வருக என்ற வாசகம் உள்ளது.
 
சமீபத்தில் இணைப்பு விழா நடைபெற்ற கட்சி அதிமுக ஒன்றுதான். எனவே அந்த கட்சியில் நடந்த ஒருசில சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்றும், அந்த கட்சியின் இரண்டு பெரிய தலைவர்கள் கேரக்டரில் பழ கருப்பையாவும், ராதாரவியுடம் நடித்திருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
இன்று டுவிட்டரில் வெளியாகியுள்ள இந்த படத்தின் இரண்டு ஸ்டில்களும் மிக  வேகமாக வைரலாகி வருவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் பலமடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது