வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 18 மே 2018 (20:46 IST)

பறந்து பறந்து அடிச்சா ஹீரோ ஆக முடியுமா?

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. 20-த்தும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் குறிப்பிட்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். 
 
அந்த வகையில் நடிப்பில் இன்று காளி படம் வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ருதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
 
இந்நிலையில், விஜய் ஆண்டனி சமீபத்திய பேட்டி ஒன்று பின்வருமாறு, நான் நடிகன் கிடையாது. உண்மையில் எனக்கு நடிக்க தெரியாது. நான் ஹீரோ என்று சொல்லிக் கொள்ளலாம். ஹீரோ என்பது ஆக்‌ஷன், பில்டல்புகள், ஸ்லோமோஷனில் நடந்து... அப்படிப்பட்ட ஹீரோ நான் கிடையாது. 
 
பறந்து பறந்து அடிக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்க மாட்டேன். ஆளுமை, குணாதிசயம், நல்லவன் என்பதுதான் ஹீரோ என்பதற்கு என்னுடைய அளவுகோல்கள் என தெரிவித்துள்ளார்.