செவ்வாய், 21 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified செவ்வாய், 4 அக்டோபர் 2022 (08:55 IST)

“ரஜினியின் மகளாக நடிக்க தேர்வாகியுள்ளீர்கள்…” மும்பை பெண்ணிடம் 10 லட்சம் மோசடி!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அண்ணாத்த படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் படத்தின் ஷுட்டிங்கில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு யோகி பாபு, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் மகளாக நடிக்க தேர்வாகியுள்ளதாகக் கூறி மும்பையைச்  சேர்ந்த நிலேஷா என்ற பெண்ணிடம் இரண்டு பேர் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். தெலுங்கு திரைப்பட நிறுவனத்தின் பெயரை சொல்லி அந்த நிறுவனம் மூலமாக ரஜினியின் படத்தை தயாரிப்பதாக நிலேஷாவின் பெற்றோரிடம் அறிமுகமாகியுள்ளனர் பியுஸ் ஜெயின் மற்றும் மந்தன் ருபேரல் ஆகிய இருவரும்.

உங்கள் மகள் ரஜினியின் மகளாக நடிக்க தேர்வாகியுள்ளார் என்று கூறி பாஸ்போர்ட் உள்ளிட்ட சில விஷயங்களுக்காக நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி 10 லட்சம் ரூபாயை வாங்கி தலைமறைவாகியுள்ளனர். இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நிலேஷாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.