1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (09:18 IST)

’மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்ற கட்டிட தொழிலாளியின் மகள்!

miss tamil nadu
’மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்ற கட்டிட தொழிலாளியின் மகள்!
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 
 
ஜெய்ப்பூரில் ’மிஸ் தமிழ்நாடு அழகி போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் தமிழகத்தில் இருந்து ஏராளமான அழகிகள் கலந்து கொண்டனர்.
 
இந்த போட்டியில் செங்கல்பட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் ரக்சயா என்பவர் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று அசத்தியுள்ளார். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 
 
தனது பெற்றோர் வறுமையாக இருந்த சூழ்நிலையிலும் பகுதி நேரமாக வேலை செய்து சொந்த முயற்சியில் அழகி போட்டிக்காக தன்னை தயார் படுத்தி வந்த ரக்சயாவுக்கு தற்போது மிஸ் தமிழ்நாடு பட்டம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது