1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 ஜூன் 2018 (12:50 IST)

வச்சாங்கள்ல டுவிஸ்டு - பிக்பாஸ் வீடியோ

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

 
சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆண் போட்டியாளர்கள் எஜமானர்களாகவும், பெண் போட்டியாளர்கள் வேலைக்காரிகளாகவும் இருக்க வேண்டும். இந்த லக்சரி டாஸ்குக்கு 1600 பாயிண்டுகள் என்பதால் வேறு வழியின்றி பெண்கள் ஒப்புக்கொண்டனர்.
 
அதைத் தொடர்ந்து சமையல் செய்வது, சாப்பாடு ஊட்டி விடுவது, துணிகளை துவைப்பது, நடனம் ஆடுவது என ஆண்கள் கூறிய அனைத்து வேலைகளையும் பெண் போட்டியாளர்கள் செய்து வந்தனர். அதில், பல பஞ்சாயத்துகளும் எழுந்தது.
 
இந்நிலையில், இன்று வெளியிடப்பட்ட 2வது புரோமோ வீடியோவில் தாடி பாலாஜியை தம்பி பாலாஜி என நித்யா அழைத்து அவருக்கு பல வேலைகளை தருவது போலவும், இதனால் பாலாஜி கடுப்பாவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 
 
இதிலிருந்து பெண்கள் எஜமானர்களாகவும், ஆண்கள் வேலைக்காரர்களாகவும் செயல்படும் டாஸ்க்கை பிக்பாஸ் கொடுத்திருப்பார் எனத் தெரிகிறது.