புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 27 டிசம்பர் 2019 (18:51 IST)

கோபிநாத் என் புருஷனே கிடையாது: சீரியல் நடிகை ரேகா பேட்டி!

தூக்கிட்டு தற்கொலை செய்த நபர், தமது கணவர் கிடையாது என்று தொலைக்காட்சி நடிகை ரேகா மறுத்துள்ளார். 
 
சின்னத்திரையில் உள்ள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகையும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் ரேகாவின் கணவர் கோபிநாத் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 39. சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் இவர் இன்று தற்கொலை செய்துக்கொண்டார். 
 
இந்நிலையில், சென்னை ஜெ.ஜெ.நகரிலுள்ள தனியார் விளம்பர நிறுவன அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த நபர், தமது கணவர் கிடையாது என்று தொலைக்காட்சி நடிகை ரேகா மறுத்துள்ளார். மேலும், உயிரிழந்த நபர் இன்னொரு தொலைக்காட்சி நாடக நடிகையான ஜெனிபர் ரேகாவின் கணவர் என்றும், தமது கணவர் கிடையாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.