1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 27 டிசம்பர் 2019 (10:22 IST)

சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை: கள்ளக்காதல் காரணமா?

சின்னத்திரை நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ரேகா என்பவரின் கணவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
சின்னத்திரையில் உள்ள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகையும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் ரேவதியின் கணவர் கோபிநாத் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 39. சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் இவருக்கும் இவரது மனைவி ரேகாவிற்கும் இடையே அவ்வப்போது பிரச்னை வந்துள்ளது 
 
கோபிநாத் தன்னுடன் பணிபுரியும் பெண் ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும் இந்த கள்ள காதலை தெரிந்து கொண்ட ரேகா, அவரிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கிறிஸ்மஸ் விடுமுறை தினத்தில் ரேகாவும் கோபிநாத்தும் சண்டை போட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த கோபிநாத் வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய அலுவலகத்துக்கு சென்றதாகவும் தருகிறது
 
நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறை என்றாலும் கோபிநாத் கையில் ஒரு சாவி இருந்ததால் அந்த சாவியின் மூலம் அலுவலகத்தை திறந்து உள்ளே சென்ற அவர், தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை ஊழியர்கள் அலுவலகத்திற்கு நுழைந்ததும் கோபிநாத் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் 
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து கோபிநாத் உடலை கைப்பற்றி போஸ்ட்மார்ட்டம் செய்ய அனுப்பிவைத்தனர். இதனை அடுத்து நடந்த விசாரணையில் கடன் பிரச்சனை மற்றும் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு ஆகியவையே அவரது தற்கொலைக்கு காரணமாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்