1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 17 நவம்பர் 2019 (20:05 IST)

விஜய் படத்தில் லேட்டஸ்டாக இணைந்த ஐஸ்வர்யா: புதிய தகவல்

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படத்தில் தற்போது ஐஸ்வர்யா நந்தகுமார் என்ற தொலைக்காட்சி நடிகை இணைந்துள்ளார்
 
இவர் ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ் பெற்றிருந்த நிலையில், இவர் நடித்த தொலைக்காட்சி தொடர் ஒன்றை சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் பார்த்ததாகவும் இதனை அடுத்து இந்த படத்தில் உள்ள ஒரு முக்கிய கேரக்டரில் அவர் நடித்தால் சரியாக இருக்கும் என்று கருதி அவரை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து ஒப்பந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது 
 
நடிகை செளந்தர்யா நந்தகுமாரிடம் 15 நாட்கள் கால்சீட் பெற்றுள்ளதாகவும், இதில் பத்து நாட்கள் விஜய்யுடன் மட்டுமே நடிக்கும் வாய்ப்பு அவருக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இதுகுறித்து ஐஸ்வர்யா நந்தகுமார் பேட்டி ஒன்றில் கூறுகையில் ’விஜய் நடிக்கும் படத்தில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிப்பேன் என்று நான் கனவில்போல கருதவில்லை என்றும், இந்த வாய்ப்பு தனக்கு தொலைக்காட்சி தொடரால் தான் கிடைத்தது என்றும் அதற்காக அந்த தொடரின் இயக்குநர் கார்த்திக் அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்வதாகவும் கூறினார் 
 
மேலும் தன்னுடைய கேரக்டர் குறித்து இயக்குனர் லோகேஷ் கூறியதும் இவ்வளவு முக்கியமான கேரக்டரை தன்னை நம்பி தருவதை அறிந்து ஆச்சரியம் அடைந்ததாக, ஆனால் தன்னுடைய கேரக்டர் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றும் அவர் கூறினார் 
 
ஏற்கனவே தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யா இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில், தற்போது இன்னொரு தொலைக்காட்சி பிரபலம் ’தளபதி 64’ படத்தில் இணைந்து உள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது