வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : புதன், 22 நவம்பர் 2017 (22:23 IST)

கடவுளைவிட நாகர்ஜுனா திறமையை நம்புகிறேன்” - ராம்கோபால் வர்மா

‘கடவுளைவிட நாகர்ஜுனா திறமையை நம்புவதாக’ இயக்குநர் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

நாகர்ஜுனாவும், ராம்கோபால் வர்மாவும் சேர்ந்து 28 ஆண்டுகளுக்கு முன்பு ‘சிவா’ என்ற படத்தைத் தந்தனர். படம் சூப்பர் ஹிட்டானாலும், அதன்பிறகு இருவரும் இணையவே இல்லை. 28 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் இருவரும் இணைந்துள்ளனர். பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை, சமீபத்தில் நடைபெற்றது.
 
அதில் பேசிய ராம்கோபால் வர்மா, “என் கற்பனைத்திறன் போய்விட்டதாக மக்கள் கிண்டல் செய்கிறார்கள். ஆனால், நான் யார் என இந்தப் படம் மூலம் நிரூபித்துக் காட்டுவேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், நாகர்ஜுனா திறமை மீது நம்பிக்கை உள்ளது” என்று பேசினார். இந்தப் படத்தில் போலீஸாக நடிக்கிறார் நாகர்ஜுனா.