1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 12 ஜூன் 2017 (16:10 IST)

ஆபாச படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ராம்கோபால் வர்மா....

ஆபாச படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ராம்கோபால் வர்மா....
தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பெண்களின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் எப்போதும்  சர்ச்சையான கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வந்தவர் ராம்கோபால் வர்மா. இதன் காரணமாக இவர் மீதி நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. 
 
அந்நிலையில், தனது பதிவுகளால் சர்ச்சைகள் வெடிப்பதோடு, பல வழக்குகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், அதுமட்டுமின்றி தனக்கு வேலை அதிகம் இருப்பதால் டுவிட்டரில் இருந்து வெளியேறுவதாக கூறினார் வர்மா.

ஆபாச படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ராம்கோபால் வர்மா....

இந்நிலையில், தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் சில ஆபாசமான புகைப்படங்களை அவர்  பதிவு செய்துள்ளார். இதைக் கண்ட பலரும் சமூகவலைத்தளங்களில் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். எப்போதும்போல் அது எதையும் ராம்கோபால் வர்மா கண்டுகொள்ளவில்லை..

ஆபாச படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ராம்கோபால் வர்மா....