அஜித் 62 படத்தில் இருந்து வெளியேறினாரா த்ரிஷா?
அஜித் 62 படம் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அந்த படம் பற்றிய பல தகவல்கள் பரவி வருகின்றன.
துணிவு படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்க உள்ள அஜித் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த படம் ஜனவரி இறுதியில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அவரை நீக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.