1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (18:31 IST)

த்ரிஷா நடித்த ‘தி ரோடு’: சிங்கிள் பாடல் ரிலீஸ்..!

நடிகை த்ரிஷா நடித்த ‘தி ரோடு என்ற திரைப்படம் வரும்  அக்டோபர் ஆறாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில்  இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடலான ஓ விதி என்ற பாடல் வெளியாகி உள்ளது. 
 
சித் ஸ்ரீராம் குரலில் உருவான இந்த பாடலை  கார்த்திக் நேதா என்பவர் எழுதியுள்ளார். சாம் சிஎஸ் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் வரிகள் இதோ:
 
ஓ விதி... யார் சதி.. யார் வலி..யார் ஒலி..
ஆசையின் காம்பிலே பூக்குதே மலரே மலரே
துயர் யாராலே..
 
ஈரம் உள்ள கூட்டில்
தீயை உமிழ்ந்தோர் யாரோ
பாதை வந்த வேளை
பாதம் கிழித்தோர் எவரோ
 
நீரில் இளைப்பாரும்
மீனின் கனவில்
ஒரு தூண்டில்
நிழல் ஆட்டும்
யாரின் விரலோ
யாவும் மாயையோ.
 
ஓ விதி... யார் சதி.. யார் வலி..யார் ஒலி..
ஆசையின் காம்பிலே பூக்குதே மலரே மலரே
துயர் யாராலே..
 
நேற்றிருந்த வாழ்வை
சூறை கொண்டு போச்சோ
வாங்கி வந்த நாளை
காலம் கொண்டே போச்சோ
சாம்பல் புயற்காற்றில்
ஓர் பறவை
அது சாவின் சுமையேறி
காணும் நிலவை
வாழ்வே வேலியோ..
 
Edited by Siva