திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2023 (07:01 IST)

லியோவுக்கு முன்பு ரிலீஸாகும் த்ரிஷாவின் ”ரோட்” திரைப்படம்!

தமிழ் சினிமாவில் நாயகிகளின் காலம் என்று பார்த்தால் 5 முதல் 10 ஆண்டுகள்தான். அதன் பிறகு அக்கா, அம்மா வேடத்தைக் கொடுத்துவிடுவார்கள். ஆனால் ஒரு சிலர்தான் இதற்கு விதிவிலக்காக இருப்பார்கள். அப்படிப்பட்ட நடிகைதான் திரிஷா.

சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து இப்போதும் பரபரப்பான கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக பெரியளவில் வாய்ப்பில்லாமல் இருந்தாலும் இப்போது பொன்னியின் செல்வன் வெற்றியால் மீண்டும் அவரைத் தேடி வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் அவர் தனி கதாநாயகியாக நடித்துள்ள ரோட் திரைப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது. அக்டோபர் 19 ஆம் தேதி அவர் நடித்துள்ள லியோ படம் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.