இந்தி சினிமா வரலாற்றில் முதல் முறை: முதல்நாளில் ‘ஜவான்’ ரூ.129 கோடி வசூல்..!
இந்தி சினிமா வரலாற்றில் முதல்முறையாக ரிலீஸ் ஆன முதல் நாள் 129 கோடி ரூபாய் வசூல் செய்து ஜவான் சாதனை செய்துள்ளது
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்ததால் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல் சற்றுமுன் அட்லீ தனது சமூக வலைதளத்தில் இந்த படம் முதல் நாளில் 129 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாலிவுட் திரையுலகில் இது மிகப்பெரிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஷாருக்கானின் முந்தைய படம் பதான் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் ஜவான் திரைப்படமும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Siva