செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2021 (12:37 IST)

ரசிகர்களுக்கு ஐ லவ் யூ சொன்ன ராஷ்மிகா! - இந்த மொமெண்ட் உங்களாலதான் சாத்தியம்!

தன் வாழ்க்கையின் மகிழ்ச்சிகரமான தருணம் ஒன்றை பதிவிட்டு ரசிகர்களுக்கு ராஷ்மிகா மந்தனா ‘ஐ லவ் யூ’ சொல்லிய ட்வீட் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய மொழி சினிமாக்களில், முக்கியமாக தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்த கீதா கோவிந்தம், சரிலேரு நீக்கெவரு, டியர் காம்ரேட் என பல படங்கள் பெரும் ஹிட் அடித்ததோடு, ராஷ்மிகாவிற்கு பெரும் ரசிக பட்டாளத்தையும் உருவாக்கின.

இந்நிலையில் தற்போது தனது பணத்தில் புதிதாக ஒரு ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அதை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “பொதுவாக இதுபோன்ற தனிப்பட்ட நிகழ்வுகளை நான் பகிர்வதில்லை. ஆனால் இந்த தடவை இதை நான் உங்களுடன் ஷேர் செய்கிறேன். ஏனென்றால் இந்த பயணத்தில் நீங்கள் அனைவரும் இருந்தீர்கள்.. அதனால் இதை உங்களுக்கு தெரிய படுத்துகிறேன்.,. ஐ லவ் யூ.. இது உங்களுக்காக” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ராஷ்மிகா ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.