வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (22:32 IST)

செண்டிமெண்ட்டை பிழியும் பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் சண்டை மற்றும் சச்சரவு ஆகியவற்றைத்தான் கடந்த 70 நாட்களாக பார்த்து வந்தோம். ஆனால் மகத் வெளியேறிய பின்னர் இன்று முழுக்க முழுக்க செண்டிமெண்ட்டாக நிகழ்ச்சி உள்ளது.
 
முதலில் ஒவ்வொரு போட்டியாளரும் தான் பிக்பாஸ் வீட்டில் வந்தபோது மற்றவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதையும் இப்போது எப்படி இருக்கின்றார்கள் என்பதையும் உருக்கத்துடன் கூறினார்கள். 
 
அதன்பின்னர் ஒவ்வொரு போட்டியாளர்களின் வீட்டில் இருந்து ஒரு கடிதமும் பரிசும் வந்திருந்தது. அதனை படித்து போட்டியாளர்கள் தங்கள் வீட்டின் நினைவு வந்து கதறி அழுகின்றனர். மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சி முழுவதுமே ஒரே அழுகாச்சியாக இருந்தது.