1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (09:32 IST)

யாஷிகாவை அநாகரீகமாக தள்ளிவிடும் மகத்: வெறுப்பின் உச்சத்தில் பார்வையாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தபோது ஓரளவு தெளிவாக இருந்த மகத், யாஷிகாவின் மிது காதல், மும்தாஜின் மீது வெறுப்பு, டேனியல் மீது மோதல், பாலாஜியின் மீது துவேஷம், ஆகியவை காரணமாக கிட்டத்தட்ட மனநிலை பாதிக்கும் அளவுக்கு சென்றுவிட்டதாகவே கருதப்படுகிறது
 
ஒரே ஒரு பார்வையாளரின் நன்மதிப்பை கூட பெறாத மகத்தை இனியும் பிக்பாஸ் வீட்டில் தொடர பிக்பாஸ் அனுமதித்தால் இந்த நிகழ்ச்சி ஆபத்தில் முடியவும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது
 
இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கில் யாஷிகாவை அநாகரீகமாக பிடித்து தள்ளிவிடுகிறார் மகத். அதுமட்டுமின்றி டேனியலையும் பாலாஜியையும் தாக்கவும் செய்கிறார். எனவே மகத் மீது கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் ஆத்திரத்தில் உள்ளனர். இதுக்கு மேல பொறுமையாக இருக்க முடியாது பிக்பாஸ் என்று டேனியல் கூறுவதுதான் நம்முடைய கருத்தாகவும் உள்ளது.