1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (19:51 IST)

மகத்தின் கன்னத்தில் பளார் பளாரென அடித்த சிம்பு: அதிர்ச்சி வீடியோ

பிக்பாஸ் வீட்டில் கடந்த 70 நாட்களாக ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவின் பேச்சை கேட்டு ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த மகத் நேற்று ஒரு வழியாக வெளியேற்றப்பட்டார். வீட்டை விட்டு வெளியேறும்போது பரிதாபமாக அவரது முகம் இருந்தாலும் அவர் செய்த அட்டகாசங்களை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது.
 
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மகத், முதல் வேலையாக அவருடைய நெருங்கிய நண்பரான சிம்புவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மகத்தை பளார் பளாரென சிம்பு அறைகிறார். இதுகுறித்த வீடியோ ஒன்று மகத்தின் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறை செல்லமாக இருந்தாலும் 'இதைவிட பெரிய அடியெல்லாம் நீ ஏற்கனவே வாங்கிட்டு வந்திருக்க, அதனால் இந்த அறை உனக்கு வலிக்காது என்று சிம்பு கூற அதற்கு மகத் சிரிப்பதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.
இந்த நிலையில் மகத் இல்லாத பிக்பாஸ் வீடு ஐஸ்வர்யாவுக்கும் யாஷிகாவுக்கும் கொடுமையாகவும், மற்றவர்களுக்கு கொண்டாட்டமாகவும் உள்ளது. பார்வையாளர்களின் அடுத்த குறி ஐஸ்வர்யாவாக இருக்கும் என்பதால் யாஷிகா தனிமையில் விடப்பட வாய்ப்பு அதிகம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.