1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 25 ஆகஸ்ட் 2018 (22:16 IST)

முதல்முறையாக யாஷிகா, ஐஸ்வர்யாவை கண்டித்த கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தொடங்கியதில் இருந்தே ஐஸ்வர்யா, யாஷிகா ஆகிய இருவரையும் செல்லப்பிள்ளை போல் கமல் நடத்தியதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது. அவர்கள் இருவரும் என்ன தவறு செய்தாலும் கண்டிக்காமல் இருந்தது மட்டுமின்றி தவறே செய்யாதவர் ஐஸ்வர்யாவுக்கு குடை பிடிக்க வேண்டும் என்று கூறியதும் கமல்தான்
 
இந்த நிலையில் இதே கமல்தான் இன்று ஐஸ்வர்யாவையும் யாஷிகாவையும் கடுமையாக கண்டித்தார். ஏனெனில் இன்று கமல் கண்டிக்கவில்லை என்றால் அது அவருக்கே பிரச்சனையாகிவிடும் என்று தெரிந்துவிட்டது.
 
மும்தாஜை வயதில் பெரியவர் என்ற மரியாதை இல்லாமல் மகத் நடந்து கொண்டதை கண்டித்த கமல், மகத்தை தவறாக பயன்படுத்தியதாக யாஷிகாவையும் ஐஸ்வர்யாவையும் கண்டித்தார். அதேபோல் மும்தாஜின் பொறுமை மற்றும் அமைதியாக கடைபிடித்த போக்கையும் கமல் பாராட்டினார். 
 
மொத்தத்தில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல்முறையாக பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவும் எண்டர்டெயினாகவும் இருந்ததாகவும் அனைவரும் கருதினர். இதேபோக்கில் சென்றால் இனிவரும் 30 நாட்களிலாவது இந்த நிகழ்ச்சி சுவாரஸ்யத்தை நோக்கி செல்லும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது