வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 23 நவம்பர் 2020 (10:02 IST)

தோல்விய தழுவிய டி.ஆர்; வெற்றி பெற்றார் தேனான்டாள் பிலிம்ஸ் முரளி!!

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் தோல்வி என அறிவிப்பு. 
 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் தேனப்பன் ஆகிய மூன்று பேர் போட்டியிட்டனர். 
 
இவர்களில் டி ராஜேந்தர் மற்றும் முரளி ஆகிய இருவரும் வெவ்வேறு அணியில் போட்டியிட்டனர் என்பதும் தேனப்பன் எந்த அணியிலும் சேராமல் தனியாக களம் கண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
நேற்று மொத்தம் உள்ள 1303 வாக்குகளில் 1050 பேர்கள் மட்டும் வாக்களித்தனர். இந்நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு, தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் தோல்வி அடைந்ததாவகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராக தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.