அதிமுக – பாஜக கூட்டணி வெச்சது நல்லதுதான்.. ஒரே அடியா வீழ்த்திடலாம்! – உதயநிதி ஸ்டாலின்
நேற்று நடந்த அரசு விழாவில் அதிமுக – பாஜக கூட்டணியை ஈபிஎஸ்-ஓபிஎஸ் அறிவித்தது நல்லதுதான் என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
நேற்று நடந்த அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு அதிமுக சார்பில் திரளான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர்ப் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி தேர்தலை சந்திக்க உள்ளதாக கூட்டாக அறிவித்தனர்.
அரசு விழாவில் கட்சி சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவதாக எதிர்கட்சிகள் அதிமுகவிற்கு கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ”திமுகவின் எதிரிகளான அதிமுக – பாஜக கூட்டணியை அறிவித்தது நல்லதுதான். இரு கட்சிகளையும் ஒரே தேர்தலில் வீழ்த்த திமுகவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது” என பேசியுள்ளார்.