துப்பாக்கி முனை மேக்கிங் வீடியோ வெளியீடு: மிரட்டலான கேரக்டரில் விக்ரம் பிரபு

VM| Last Modified வெள்ளி, 7 டிசம்பர் 2018 (17:46 IST)
கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேசன் தயாரிப்பில் விக்ரம் பிரபு, ஹன்ஷிகா மோத்வானி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் துப்பாக்கி முனை. தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம் பிரபு எண்கவுண்டர் ஸ்பெஷல் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து உள்ளார். .ஹன்சிகா மோத்வானிக்கு இது 50வது படம் ஆகும். இந்த படத்திற்கு எல்.வி முத்து கணேஷ் என்பவர் இசையமைத்துள்ளார்.
 
ராசமதி என்பவர் ஒளிபதிவு செய்துள்ளார். துப்பாக்கி முனை படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் விக்ரம் பிரபுவின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் என   எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் டிசம்பர் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் துப்பாக்கி முனை படத்தின் பேக்கிங் வீடியோ யாரிவன் என்ற பாடலுடன் தற்போது வெளியாகி உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

 
 


இதில் மேலும் படிக்கவும் :