''துணிவு''பட முதல் சிங்கில் #ChillaChilla ரிலீஸில் தாமதம்!
துணிவு படத்தின் முதல் சிங்கில் பாடல் சில்லா சில்லா ரிலீஸாவதில் சற்றுத் தாமதமாகியுள்ளது.
தமிழ் சினியாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் வலிமை படத்திற்கு பின் துணிவு படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ள நிலையில் சில்லா சில்லா பாடலை வைசாக் எழுதியுள்ளார், அனிருத் பாடியுள்ளார்.
இப்பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், சற்று தாமதாக மாலை 6:30க்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்பாடலை கொண்டாட காத்துக் கொண்டிருப்பதாக இணையதளங்களில் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.