செனபன்னி மாதிரி இருந்துட்டு Fitness ஒரு கேடா? கிண்டலுக்கு விஜே பார்வதி பதிலடி!
கிண்டலுக்கு பதிலளித்த விஜே பார்வதி !
கலாட்டா தமிழ் யூடியூப்பில் தொகுப்பாளினியாக இருக்கும் VJ பார்வதி தனக்கென தனி ரசிகர்களை பெற்றுவிட்டார். எக்குத்தப்பாக நெட்டிசன்களிடம் கேள்வி கேட்டு விமர்சனத்திற்குள்ளாவது இவரது வழக்கமான ஒன்று.
ஆங்கராக அறிமுகமான கொஞ்சம் நாட்களில் பெரும் பேமஸ் ஆகினார். அதற்கு ஏற்றாற்போல் திடீரென கவர்ச்சியான ஆடைகளை அணிந்துக்கொண்டு கிளாமரில் இறங்கிவிட்டார்.
இந்நிலையில் தற்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்ஸ் கர்ப்பமான பன்னி மாதிரி இருந்திட்டு ஒர்க் போட்டோ போடுறியேமா. பிட்னெஸா இருந்தா கூட பார்க்கலாம். இத பார்க்க முடியமா? என மோசமாக கிண்டலடித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள பார்வதி, என் தொப்பைக்கு இது போன்ற மோசமான கமெண்ட்ஸ்கள் வருமென்று நான் எதிர்பார்த்தேன். அழகுக்கான அளவை யார் தீர்மானம் செய்கிறார்கள். இது என் இஷ்டம் , என் உடம்பு, என் அக்கவுண்ட் எனக்கு பிடித்தவாறு நான் போடுகிறேன். இது அடுத்தவர்களை சந்தோஷப்படுத்த அல்ல என பதிலடி கொடுத்துள்ளார்.