#ஆண்டவர்_தீயென்று_தெரிகிறதா….ட்விட்டரில் ஹேஸ்டேக் டிரெண்டிங்
செல்லுமிடம் எல்லாம் உற்சாகத்துடன் வரவேற்கும் மக்கள் வெற்றி உமக்கே எனக் குரல் எழுப்புகின்றனர் எனத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதற்கான பிரசாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.
அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே நிச்சயம் தனது கட்சி வெல்லும் என எதிர்ப்பார்ப்புடன் கமல் உள்ளார்.
இந்நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
வரும் தேர்தலில் மக்கள் நலனுக்காக இகோவைவிட்டு நான் ரஜினியுடன் இணைந்து செயல்படத் தயார். எம்.ஜி.ஆர் திமுகவின் திலகமும் இல்லை; அதிமுகவிம் திலமும் இல்லை; அவர் மக்கள் திலகம்.
எங்கள் கட்சியின் பரப்புரைக்கு மறுப்பு தெரிவிக்கப்படும்பொருட்டு விஸ்வரூபம் இருக்கும்…. எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது கமல் தனது டிவிட்டர் பக்கத்தில்,
கர்மவீரரின் ஊரில், கட்டுக்கடங்கா உற்சாகத்தோடு மக்கள் கூட்டம்; மத்தாப்புப் புன்னகைகளை சிவகாசியிலும், மிட்டாய் இனிமையை கோவில்பட்டிக் காற்றிலும் உணர்ந்தேன். தம் வீட்டு வாசல்களில் நின்று வெற்றி உமதே என குரலெழுப்பும் மாதர்களிடம் சொன்னேன் 'வெற்றி நமதே' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், #ஆண்டவர்_தீயென்று_தெரிகிறதா…என ட்விட்டரில் ஹேஸ்டேக் டிரெண்டிங் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.