புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 10 நவம்பர் 2018 (14:00 IST)

அட நீங்கவேற...! நாங்க சோசியல் மீடியாவுலே இல்ல - தமிழ் ராக்கர்ஸ் தடாலடி

சர்கார் படம்  கதை திருட்டு, அரசியல்வாதிகள் எதிர்ப்பு, என பல சர்ச்சைகளை அடுக்கடுக்காக சந்தித்து வந்தபோது, எரியும் தீயில் என்னை ஊற்றும் விதமாக படத்தை எச் டி பிரிண்டில் வெளியிடுவோம் என்று சாவல் விடுத்தது தமிழ் ராக்கர்ஸ். இதனால் சர்க்கார் படக்குழுவினர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் அலறிவிட்டனர். 
இதை பற்றி தமிழ் ராக்கர்ஸ் தற்போது வெளியிட்டுள்ள செய்தியில்,  சமூக வலைத்தளங்கள் எதிலும் நாங்கள் இல்லை எனவும், சமூக வலைத்தளங்களில் தங்கள் பெயரில் வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 
 
சர்கார் படத்தை முதல் நாளே இணையத்தில் வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டு வந்தது. அதன்படியே அன்றைய தினமே சர்கார் படம் இணையத்தில் வெளியிடப்பட்டது. 
 
அதுபோன்று ரஜினிகாந்தின் '2.0' திரைப்படம் ரிலீசாகும் தினமான 29ம் தேதியன்றே அது இணையத்திலும் வெளியாகும் என தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரிலான டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியாகியிருந்தது.
 
ஆனால், இன்று தமிழ் ராக்கர்ஸ், தங்களுக்கென எந்த ட்விட்டர் பக்கமும் கிடையாது என அறிவித்துள்ளது. எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் தாங்கள் இல்லை என்றும், தங்களது பெயரில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தமிழ் ராக்கர்ஸ் விளக்கமளித்துள்ளது.