வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (10:30 IST)

இதுலயும் ரஜினி தான் டாப்! விஜய் 2வது இடம்

ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெளியாகிறது. அதில்  உலக அளவில் 200 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய படங்கள் என்றால் மிகவும் குறைவு.


 
அந்த லிஸ்ட்டினை சினிமா பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் அதிகப்படியாக ரஜினியின் 4 படங்கள் இடம் பெற்றுள்ளன. எந்திரன், கபாலி, 2.0, பேட்ட ஆகிய 4 படங்கள் 200 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் விஜய்யின் மெர்சல், சர்கார் ஆகிய படங்களும் 200 கோடி லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. இது தவிர தெலுங்கில் ராம் சரண் நடித்த ரங்கஸ்தலம், தமிழில் விக்ரம் நடித்த ஐ,  பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி, பாகுபலி2 ஆகிய படங்களும்  200 கோடி வசூலில் இணைந்துள்ளன.