செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 30 ஜனவரி 2019 (12:31 IST)

தமிழ்நாடு தவிர்த்து பேட்ட மற்றும் விஸ்வாசம் வெற்றிப் படங்களா?

பொங்கலுக்கு வெளியான பேட்ட தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் வசூல் சாதனை செய்து வர அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் எதிர்பார்த்த அளவு வசூல் இல்லை எனக் கூறப்படுகிறது.

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி  பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் ரிலிஸாகின. இரண்டுப் படங்களுமே மிகப்பெரிய நட்சத்திரங்களைக் கொண்டவையாக இருந்ததனால் தமிழகம் முழுக்க உள்ள தியேட்டர்களை கிட்டத்தட்ட சமமாகப் பிரித்து ரிலிஸ் ஆகின.

ரிலிஸுக்குப் பின்னர் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் யார் படம் மிகப்பெரிய வெற்றி என்பதில் அடித்துக்கொள்ள ஆரம்பிக்க இருப் படங்களின் தயாரிப்பு நிறுவனங்களும் கோதாவில் குதித்தனர். பேட்ட படம் 11 நாள்களில் 100 கோடு வசூல் செய்து குறைந்த நாட்களில் 100 கோடி வசூலித்த படம் என்ற சாதனையை நிகழ்த்தும் என சன் பிக்சர் சார்பில் திருப்பூர் விநியோகஸ்தர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

இதையடுத்து விஸ்வாசம் படத்தின் விநியோகஸ்தர்கள் விஸ்வாசம் படம் 8 நாளில் 125 கோடி வசூலித்து உள்ளதாக அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் அடித்துக் கொண்டு திரிய. இருப் படங்களின் தயாரிப்புத் தரப்புமே அண்டை மாநில வசூல் நிலவரங்களைப் பற்றி வாயே திறக்கவில்லை. விஸ்வாசம் படம் ஆந்திராவில் இன்னும் ரிலிஸாகவில்லை. ஆனால் கேரளா மற்றும் கர்நாடகாவில் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்றாலும், மிகக்குறைந்த அளவில் விற்கப்பட்டதால் அங்கு யாருக்கும் கையைக் கடிக்காத அளவுக்கு வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் பேட்ட படமோ ரஜினி படம் என்பதால் கேரளா, ஆந்திர, தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டன. ஆனால் எங்குமே எதிர்பார்த்த அளவில் வசூல் செய்யவில்லையாம். வாங்கிய விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நஷ்டத்தையேக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதுபோல 2.0 வின் இமாலய வெற்றியால் இந்தியில் வாங்கிய விநியோகஸ்தருக்கு இந்தப் படம் மிகப்பெரிய நஷ்டத்தை அளித்து படுதோல்வி அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் பேட்ட படம் தமிழகம் மற்றும் வெளிநாடுகள் தவிர வேறு எந்த இந்திய மாநிலங்களிலும் சொல்லிக்கொள்ளும் படியான லாபத்தை அளிக்க வில்லையெனக் கூறப்படுகிறது.