1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (11:42 IST)

இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்! - சின்மயி உருக்கம்

பிரபல பின்னணி பாடகி சின்மயி, மிகப்பிரலமான டப்பிங் ஆர்டிஸ்டும் கூட. இவர் தான் 96 படத்தில் த்ரிஷாவுக்கு பின்னணி குரல் கொடுத்திருந்தார். இந்நிலையில் இவரை  . தமிழ்நாடு டப்பிங் யூனியனில் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளார்கள். இந்த தகவலை டுவிட்டரில் சின்மயி கூறியுள்ளார்.
 
 இசை நிகழ்ச்சிக்காக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சின்மயி  இதுகுறித்து டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ``நான் கடந்த இரண்டு வருடங்களாக டப்பிங் யூனியனுக்காக சந்தா செலுத்தவில்லை எனக் காரணம் கூறப்பட்டு, யூனியனில் எனது உறுப்பினர் அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டுள்ளேன். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை டப்பிங் யூனியனில் உறுப்பினர் அல்லாத ஒருவர் எந்தப் படத்துக்கும் டப்பிங் செய்ய முடியாது. நான் எனது சந்தாவை செலுத்தவில்லை என இதனால் மெம்பர்ஷிப் ரத்துசெய்யப்படும் என எந்த ஒரு தகவலும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. டப்பிங் யூனியனில் இருந்து என்னைத் தூக்கும் முடிவின் முதல் நடவடிக்கையாகத்தான் இது தெரிகிறது. 
 
நான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அந்தத் தொகையைக் கட்டினாலும், எனது உறுப்பினர் அந்தஸ்து திரும்பக் கிடைக்குமா எனத் தெரியவில்லை. எனினும், இந்த இரண்டு வருடத்தில் எனது சம்பளத் தொகையிலிருந்து 10 சதவிகிதத் தொகையை யூனியன் எடுக்கத் தவறியதில்லை. தமிழில் '96 தான்  எனது கடைசிப் படமாக இருக்கப்போகிறது. டப்பிங் யூனியனின் இந்த நீக்கம் தொடருமேயானால், ஒரு நல்ல படத்துடன் தமிழில் எனது டப்பிங் பயணத்தை முடிப்பது மகிழ்ச்சியே. பை! பை!" இவ்வாறு கூறியுள்ளார்.