1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 29 அக்டோபர் 2018 (14:02 IST)

படுக்கைக்கு அழைத்ததில் என்ன தவறு? - நடிகர் சர்ச்சை பேட்டி

பாலியல் புகார்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து கவிஞர் வைரமுத்துவிற்கு ஆதரவாக குணச்சித்திர நடிகர் மாரிமுத்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
கடந்த 2 வாரங்களில் இந்தி சினிமாவிலும் தமிழ் சினிமாவிலும் மி டூ விவகாரம் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இந்தியா முழுவதும் பல பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், பாடலாசிரியர்கள் என பலரும் மி டூ வில் சிக்கியுள்ளனர்.
 
தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் அத்துமீறல் புகார் தெரிவித்ததை அடுத்து வரிசையாக பல பிரபலங்களின் பெயர்களைப் பெண்கள் வெளியிடத் தொடங்கி உள்ளனர். இதையடுத்து பாலியல் புகார் தெரிவித்த பெண்களுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்புகளும் சேர்ந்தே வருகின்றன. புகார் கூறப்பட்டுள்ளவர்களில் இயக்குனர் சுசி கணேசன் மட்டும் தன் மீது புகார் கூறிய இயக்குனர் லீனா மணிமேகலை மீது மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். மற்றவர்கள் இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காத்து வருகின்றனர்.
 
இந்நிலையில், தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வரும் நடிகர் மாரி முத்து, மீ டூ பற்றி கருத்து தெரிவித்த போது “ வைரமுத்து ஒரு ஜவுளிக்கடையில் நகையை திருடிவிட்டார் என்று கூறினால் அது புகார். ஆனால், ஒரு பெண்ணை படுக்கைக்கு அழைத்தார் என்பது எப்படி தவறாகும்? அவர் ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்ப்பார்? எனவே, இந்த சர்ச்சை தேவையற்றது” என அவர் கூறியுள்ளார்.
 
ஏற்கனவே, நடிகர் லிவிங்ஸ்டன் “இது எல்லாத்துறையிலும் இருக்கிறது. ஆண்கள் அப்ரோச் பண்ணத்தான் செய்வார்கள். விருப்பம் இருந்தால் சரி.. இல்லையெனில் மறுப்பு தெரிவித்து விடலாம். அழைப்பதே தவறு எனில் சினிமாவில் உள்ள அத்தனைப் பேரையும் பிடித்து சிறையில்தான் தள்ள வேண்டும், என்னையும் சேர்த்து. சினிமா என்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் வேலை. அதில் பணிபுரிபவர்கள் சிலர் அதீத உணர்வு உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். அதையெல்லாம் கட்டுப்படுத்த முடியாது.’ எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.