ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 30 அக்டோபர் 2018 (12:54 IST)

தன்னுடைய உடையை விமர்சித்து ‘மீம்ஸ்’ போட்டவர்களுக்கு சின்மயி பதிலடி

தமிழகத்தில் மீ டூ விவகாரம் பூதாகரமாக மாறியதுக்கு மிக முக்கியமான காரணம் பாடகி சின்மயி.  இவர் கவிஞர் வைரமுத்து மீது அவர் பாலியல் புகார் சொன்ன பிறகுதான் வரிசையாக ஒவ்வொருவராக திரைத்துறையினர் மீது துணிச்சலாக  புகார் கூறினார்கள்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறிய பின்னர், சின்மயியிடம் பலர் வைரமுத்துவின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது ஏன்? என கேள்வி எழுப்பினர். மேலும் இத்தனை வருடம் அமைதியாக இருந்தது ஏன்? ஆண்டாள் சர்ச்சையுடன் தொடர்பு, பல விவகாரங்களை பூதாகரமாக கிளப்பினர். சின்மயிக்கு ஆதரவு இருந்த அதேநேரத்தில் எதிர்ப்பும் எழுந்தது. இதனால் தன்னுடைய தரப்பு நியாயத்தை விளக்கம் அளிக்க சின்மயி சென்னையில் பத்திரிகையாளர்களை அண்மையில் சந்தித்தார். அப்போது சின்மயி அணிந்து வந்திருந்த ஆடை சர்ச்சையை கிளப்பியது. அந்த உடைக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளங்களில் விவாதம் கிளம்பின.. பாடகிகள் சுசிலா, ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.பி.சைலஜா, சொர்ணலதா, சித்ரா, சுஜாதா ஆகியோர் சேலை மற்றும் பாரம்பரிய உடைகள் அணிந்திருப்பது போன்ற படங்களை வெளியிட்டு பாடகிகள் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று சின்மயி தோற்றத்தை ஒப்பிட்டு மீம்ஸ் வெளியிட்டும் விமர்சித்தனர்.

இந்நிலையில் மீம்ஸ் போட்டவர்களுக்கு பதிலடி கொடுத்து சின்மயி டுவிட்டரில் கூறும்போது “பாடகிகள் சேலை அணியவேண்டும் என்றும் நான் அணிந்த உடையை விமர்சித்தும் மீம்ஸ் போட்டுள்ளனர். கழுத்து வலியை தவிர்க்கவே அப்படி அணிந்து இருந்தேன்” என்று கூறியுள்ளார்.