புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 19 நவம்பர் 2018 (11:08 IST)

டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி அதிரடி நீக்கம்! அதிர்ச்சி தகவல்

மீடு இயக்கம் மூலம் சினிமா பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் பரபரப்பு கிளப்பியவர் பிரபல பின்னணி பாடகி சின்மயி.

அப்போது சின்மயிக்கு ஆதரவாக பலரும் குரல் எழுப்பினார்கள் இதேபோல் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் பலரும் குரல் எழுப்பினார்கள்
 
இந்நிலையில் நேற்று சின்மயிக்கு அதிர்ச்சியான  தகவல் ஒன்று  வந்துள்ளது.
 
 சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவை எதற்கு என்று கேட்க, சந்தா கட்டவில்லை என்று சின்மயியே டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
ஆனால், அது மட்டும் காரணமில்லையாம், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் "தமிழ் நாடு டப்பிங் யூனியலில் கிட்டத்தட்ட 15 புகார்கள் விசாரிக்காமல் நிலுவையில் உள்ளது என்று சங்கத்தை எதிர்த்து பேசியுள்ளாராம்.
 
இதற்கு விளக்கம் கேட்ட யூனியனுக்கு பதில் அளிக்காத காரணத்தினாலும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.