திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 20 ஜூலை 2022 (19:29 IST)

நடிகர் சித்தார்த்தின் புதிய காதலி இவர்தான்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சித்தார்த். இவர் புதிய காதலி பற்றிய தகவல் வெளியாகிறது.

ஷங்கர் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் இயக்கிய படம் பாய்ஸ். இப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் சித்தார்த். இப்படத்திற்குப் பின் ஆயுத எழுத்து, 180, காவிய தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

முன்னணி நடிகராக வலம் வந்த சித்தார்த்  தெலுங்கு, தமிழ் சினிமாவில் வெற்றி படம் கொடுக்கப் போராடி வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் தனது மனைவி மேகலா நாராயணனை விவாகரத்து செய்த அவர், ஸ்ருதிஹாசனுடன் டேட்டிங் செய்து வந்தார்.

இந்த நிலையில்,  காற்று வெளியிடை  படத்தில் அறிமுகமான அதிதி ராவ், சித்தார்த்துடன் ஜோடியாக வலம் வருகிறார்.

இருவரும் காதலித்து வருவதாகவும் இவர்கள் விரைவில் இதுகுறித்து அறிவிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

அதிதிராவ் கடந்த2013 ஆண்டு தனது கணவர் சத்யதீப் மிஷ்ராவை விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.